திருச்செங்கோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருச்செங்கோடு பகுதியில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் ஜமாத்துகளில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொழுகை நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருவரை ஓருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் இஸ்லாமியர்கள் சக இஸ்லாமியர்களுடமும் பிற மதத்தினருடனும் இனிப்புகளையும், பிரியாணியையும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

செய்தியாளர் : ஜெ.ஜெயக்குமார்

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!