ராசிபுரம் அருகே தனியார் பேருந்துகள் மோதல் 20 க்கும் மேற்பட்டோர் காயம்.

சேலத்திலிருந்து துறையூர்  நோக்கி சென்ற தனியார் பேருந்தும் சேலத்திலிருந்து ராசிபுரம் நோக்கி தனியார் பேருந்தும் ராசிபுரம் அடுத்த சமத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது துறையூர் சென்ற தனியார் பேருந்து ராசிபுரம் சென்ற தனியார் பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 20 க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து வெண்ணந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!