கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை – கட்டிடத் தொழிலாளார்கள் மாநாட்டில் தீர்மானம்.

நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுட்மான தொழிலாளர் சங்க 18வது மாவட்ட மாநாடு எலச்சிபாளையம் சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது  சங்க கொடியினை முன்னால் மாவட்ட துணைத் தலைவர் செங்கோடன் ஏற்றி வைத்தார்.  மாவட்டத் தலைவர் சரபோஜன் தலைமை வகித்தார். செல்வம் வரவேற்றார்.மாநாட்டை சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜாமுகமது  துவக்கி வைத்து பேசினார்.

 மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, வார்பிங் சைசிங் தொழிலாளர் சங்கத் தலைவர் செங்கோடன் , சிஐடியு கோவிந்தராஜ் ,ராமசாமி, சுந்தரம், சிபிஎம் செயலாளர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இம்மாநாட்டிம் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்  வருமாறு:- மணல் கொள்ளையை தடுத்து தமிழக அரசே மணல் விற்பனையை நடத்த வேண்டும்.    அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ, பிஎப் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்,  பணியின் போது ஏற்படும் விபத்து மருத்துவ செலவுகளை அரசும் நலவாரியமும் ஏற்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை நிலம் வழங்கவேண்டும், பெண் தொழிலாளர்களுக்கும், ஓய்வு ஊதியம் பெறும் தொழிலாளிகளுக்கும் நலவாரியம் மூலம் பென்சன் வழங்கவேண்டும். மணல் செங்கல் கம்பி  உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வுகளை கட்டுபடுத்தி கட்டுமான தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 சிஐடியு மாநில உதவி தலைவர் சந்தரன் சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி மாநாட்டை நிறைவு செய்து புதிய நிர்வாகிகளை அறிமுகபடுத்தி பேசினார்.சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவர் சரபோஜன் மாவட்ட செயலாளர் சிவராஜ், மாவட்ட பொருளாளர் கண்னண் உள்ளிட்ட 18 பேர் அடங்கிய மாவட்ட குழு தேர்வுசெய்யபட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!