திருச்செங்கோடு டாக்டரை கடத்துவதாக பணம் கேட்டு மிரட்டல், இருவர் கைது, இருவர் தலைமறைவு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ரிக் உரிமையாளர் செங்கோட்டுவேல் இவரது மகன் டாக்டர் ரிதீஸ் திருச்செங்கோடு தனியார் மருத்துவ மனையில் பயிற்சி டாக்டராக உள்ளார். ரித்தீசை கடத்தி கொலை செய்து விடுவோம் எனவும்,  25 லட்சம் பணம் கொடுத்தால் அவரை விட்டு விடுவதாகவும், செங்கோட்டுவேலுவிற்கு போன் வழியாக  மிரட்டல் வந்தது. இதுகுறித்து செங்கோட்டுவேல் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் போனில் மிரட்டல் விட்ட நபர்கள் செங்கோட்டுவேலுவிடம் 25 லட்சம் பணத்தை ஒரு பெட்டியில் வைத்து மலையின் பின்புறம் உள்ள ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் மறைந்து நின்றனர். அப்போது செங்கோட்டுவேல் வைத்து சென்ற பெட்டியை எடுக்க வந்த திருச்செங்கோடு பக்தவச்சலம் நகரை சேர்ந்த சுரேஷ் (23) சுரேஷ் குமார் (36) என்ற இரு தறித் தொழிலாளர்களை மடக்கி கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.இந்த செய்தி www.mysangamam.com இணையதளத்தில் இருந்து பகிரப்பட்டுள்ளது.விசாரணையில் மண்டாகப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரிக் உரிமையாளார் சதீஷ் மற்றும் எட்டிமடைப் பகுதியைச் சேந்த சங்கர் ஆகியோர் மூளையாக செயல்பட்டு டாக்டரை கடத்த திட்டமிட்டு பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ரிக் உரிமையாளார் சதீஸ் மற்றும் சங்கர் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். (படத்தில் இருக்கும் நபர்கள் 1. சதீஸ், 2.சங்கர் )

 

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!