திருச்செங்கோடு அருகே இரவு நேரத்தில் பறக்கும் மர்ம விமானங்களால் பொதுமக்கள் பீதி.

உலக மக்களின் மனம் கவர்ந்த சிறந்த செல்போன்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மொளசி பகுதியில் கடந்த சில நாட்களாக சிறிய வகையைச் சேர்ந்த மர்ம விமானங்கள் இரவு நேரங்களில் பறப்பதால் அப்பகுதி பொதுமக்கள் கடும்பீதியில் உள்ளனர். மிக பிரகாசமான ஒளியுடன் வரும் சிறிய ரக விமானத்தில் இருந்து பறக்கவிடப்படும் கேமரா போன்ற சிறு விமானங்கள் கிராமப் பகுதி முழுவதும் பல்வேறு திசைகளில் பறப்பதால் தங்களுடைய வீடுகளை மர்ம நபர்கள் வேவுபார்ப்பதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து மொளசி போலீசாரிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு வழக்கம் போல் சிறிய ரக ட்ரான்கள் மொளசி பகுதியில் பறந்து சென்றன. இதனை ஆங்காங்கே குழு குழுவாக நின்ற பொதுமக்கள் அனைவரும் பார்த்தனர். தினசரி 8.45 மணிக்கும் மேல் கிராமத்தின் மீது பறப்பதாகவும், 15 கி.மீ சுற்றளாவிற்கு இந்த சிறியவகை ட்ரோன்கள் பறந்துவிட்டு மீண்டும் ராக்கியாவலசு பகுதி ஏரியின் மீது சென்று காணாமல் போவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உண்மை நிலையை விளக்க வேண்டும் என மொளசி பகுதி பொதுமக்கள் கோருகின்றனர்.

(வீடியோவில் இரவு நேரத்தில் பறக்கும் விமான காட்சி மற்றும் பொதுமக்களின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளது)

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!