குமாரபாளையம் விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

உலக மக்களை கவர்ந்த சிறந்த செல்போன்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் தனியார் நூற்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஷிப்டிற்கு ஊழியர்களை அழைத்து வருவதற்காக வேன்கள் இயக்கப்படுகின்றன. இன்று மதியம் 2.30 மணி ஷிப்டிற்காக பெண் ஊழியர்களை அழைத்துக் கொண்டு குமாரபாளையம் பகுதியில் இருந்து வேன் ஒன்று கிளம்பியது. இந்த வேனில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தனர். வேன் ஓட்டுநர் அதி வேகமாக வேனை இயக்கியதாகக் கூறப்படுகிறது. வேன் மேட்டுக்கடை எனும் பகுதியில் சென்ற போது வளைவில் வேகத்தை குறைக்காமல் ஓட்டுநர் சென்றுள்ளார். இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்து இழுத்துச் சென்றதாகவும் அப்போது எதிரே நூல் பேல்களை ஏற்றி வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்த வேனின் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. வேனின் இடிபாடுகளில் சிக்கி 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு: – குமாரபாளையம் அடுத்த சடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மனைவி அய்யம்மாள்(60), வேம்மங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி வள்ளியம்மாள்(32), வினோபாஜி நகர் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரது மனைவி சுந்தரம்மாள்(60),  முருகன் என்பவரது மனைவி கற்பகம்(53),நஞ்சப்பன் என்பவரது மனைவி பெருமாயி(55),பழனிச்சாமி என்பவரது மனைவி மாரியம்மாள்(58) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சார்ஜ் குறைந்த போனிலும் நீண்ட நேரம் பேசலாம், இந்த கருவி இருந்தால்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!