குமாரபாளையம் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.

சார்ஜ் குறைந்த போனிலும் நீண்ட நேரம் பேசலாம், இந்த கருவி இருந்தால்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் நூற்பு ஆலை வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் நூற்பு ஆலை தொழிலாளர்கள் கற்பகம், சந்திரம்மாள், பெருமாயி, மாரியம்மாள், வள்ளியம்மாள் ,அய்யம்மாள் என்ற 6 பெண்கள் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று உடற்கூறு பரிசோதனைகள் முடிந்த நிலையில் உடல்களை வாங்க மறுத்து இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். விபத்திற்கு காரணமான வேனின் உரிமையாளர்களான தனியார் நூற்பு ஆலை நிர்வாகத்தினர் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து விபத்தில் இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இந்த போராட்டம் காரணமாக குமாரபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!