நாமக்கல் மாவட்ட உள் விளையாட்டரங்கில் இறகுபந்து விளையாட அழைப்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆர்வமுள்ள இறகுப்பந்து கிளப் உறுப்பினர்கள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

       பல்நோக்கு உள் விளையாட்டரங்கத்தில் இறகுப்பந்து விளையாட மற்றும் பயிற்சி பெற நான்கு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு 6 பேர் மட்டும். காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஒரு குழுவும், 6.00 மணி முதல் 7.00 மணி ஒரு குழுவும், 7.00 முதல் 8.00 மணி வரை ஒரு குழுவும், 8.00 மணி முதல் 9.00 மணி வரை ஒரு குழுவும், விளையாட பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வரும் 16 குழுக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

      நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை சந்தித்து பதிவு செய்து கொள்ளலாம்.

   தொலைபேசி மூலம் தகவல்களை பெற 04286-280882 என்ற எண்ணிலும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703492 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!