குமாரபாளையம், அடிப்படை வசதி கோரி பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், காந்தி நகர் பகுதியில் போதிய சாக்கடை வடிகால் வசதி இல்லாததால் குமாரபாளையம்-பள்ளிபாளையம் சாலையில் சாக்கடை கழிவு நீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருவதாகவும்,

உடலும் மனதும் எப்போதும் சந்தோசமாக இருக்க இங்கே கிளிக் செய்யவும்

இதனால் காந்திநகர் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் கூறி நகராட்சி அலுவலர்களிடம் காந்திநகர் பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் மனு கொடுத்தும் அதிகாரிகள் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தற்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் பள்ளிபாளையம் சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அடிப்படை வசதி மற்றும் சாக்கடை கால்வாய் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!