முட்டை விலையில் மாற்றம் இல்லை, இரு வாரங்களாக ஒரே விலை நீடிப்பு.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.இதனால், ஒரு முட்டையின் விலை 440 காசுகளாகவே நீடிக்கிறது.நாமக்கல்லில்  தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய ஆலோசனை குழு கூட்டம்  நேற்று நடைபெற்றது. இதில் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து  கொண்டனர்.

கூட்டத்தில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு  முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 440 காசுகளாக தொடர்வது என முடிவு  செய்யப்பட்டது. கடந்த இரு வாரமாக இந்த விலை இருந்து வருகிறது. ஒரு கிலோ  முட்டைக் கோழி ரூ.78 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ.101 ஆகவும் விலை நிர்ணயம்  செய்ப்பட்டுள்ளது.மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை  விலை விபரம் (காசுகளில்): சென்னை -457, ஐதராபாத் -382, விஜயவாடா -378,  பர்வாலா- 360, மும்பை -440, மைசூர் -435, பெங்களூரு -429, கொல்கத்தா -428,  டில்லி -375 காசுகள்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!