நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரத்ததான முகாம்.

நாமக்கல் மாவட்ட, காவல்துறை சார்பில் நாமக்கல்லில் இன்று காலை ரத்த தான முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் தலைமை வகித்தார். முகாமில் நாமக்கல் தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் டாக்டர் .தனுபிரியா மற்றும் செவிலியர்கள், மருத்துவ குழுவினர் பங்கேற்று ரத்த தானம் பெற்றனர். முகாமில் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் 22 பேர், ஊர்காவல்படையினர் 17 பேர் என மொத்தம் 39 யூனிட் இரத்தம் தானமாக வழங்கினர். இதற்கு முன்பு கடந்த 19.05.2018-ந் தேதி நடைபெற்ற முகாமில் இதேபோல் 35 யூனிட் இரத்தம் தானமாக காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ரத்த தானம் வழங்கிய காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினரை எஸ்பி அருளரசு பாராட்டினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!