நாமக்கல்,அரசு ஐடிஐ ல் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சி பெற மாணவ,மாணவிகளிடமிருந்து இணையதளம் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மற்றும் சிறப்பு இனங்கள் விண்ணப்பித்தவர்களுக்கும்  04.07.2018 அன்றும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொறியியல் தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை 05.07.2018, 06.07.2018 மற்றம் 07.07.2018 ஆகிய நாட்களிலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை 09.07.2018 மற்றும் 10.07.2018 ஆகிய நாட்களிலும், நாமக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் எனவும், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண் மூலமாக குறுஞ்செய்தியும், கடிதம் மூலமாகவும், www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் கலந்தாய்வு நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்களை பார்க்கும் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதர விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 04286-267976, 9442053732

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!