75 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனம் நறுக்கும் கருவி அரசு வழங்குகிறது.

கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனபுல் சேதமாகாமல் முழுமையாக கால்நடைகள் உட்கொள்ளும் பொருட்டு 2017 – 2018 ம் ஆண்டிற்கு தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 700  மின்சார புல் நறுக்கும் கருவி வழங்கும் பொருட்டு மத்திய அரசு ரூ. 70 லட்சம் மற்றும் மாநில அரசு ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 2017-18 ம் ஆண்டிற்கு 24 மின்சாரத்தால் இயங்கும்  புல் நறுக்கும் கருவி (Power Operated Chaff Cutter) வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 7 எண்ணிக்கை மின்சாரத்தால் இயங்கும்  புல் நறுக்கும் கருவிகள் ஆவின் தேர்வு செய்து வழங்கும் பயனாளிகளுக்கும் மீதமுள்ள 17 எண்ணிக்கை மின்சாரத்தால் இயங்கும்  புல் நறுக்கும் கருவி கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டமானது 50 சதவீதம் மத்திய அரசின் மானியம், 25 சதவீதம் மாநில அரசின் மானியம் மற்றும் 25 சதவீதம் பயனாளிகளின் பங்குதொகை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் இதுவரை அரசு இத்திட்டத்தில் மின்சார புல் நறுக்கும் கருவி பெறாத, 0.50 ஏக்கர் நிலத்தில் தீவன புல் பயிரிட்டுள்ள குறைந்தது 2 பசு அல்லது எருமை கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு நபருக்கு 1 மின்சார புல் நறுக்கும் கருவி வீதம் 24 நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 0.25 ஏக்கர் நிலத்தில் தீவன புல் பயிரிட்டுள்ள குறைந்தது 1 பசு அல்லது எருமை கால்நடை வளர்க்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஆகவே, இதுவரை அரசு திட்டத்தில் மின்சார புல் நறுக்கும் கருவி பெறாத, நாமக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை சந்தித்து திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கைப்பேசி எண் , ஆதார்எண் தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றோடு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!