திருச்செங்கோட்டில், நுண்ணீர்ப்பாசனத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு வட்டாரத்தில் பிரதமரின் விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் (பிஎம்கேஎஸ்ஒய்) செயல்படுத்தப்படும் நுண்ணீர்ப்பாசனத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

பிஎம்கேஎஸ்ஒய் நுண்ணீர்ப்பாசனத்திட்டம் குறித்து ஏமப்பள்ளி கிராமம் விட்டம்பாளையம் பகுதியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.இதில் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) அன்புச்செல்வி  கலந்து கொஞ்டு பிஎம்கேஎஸ்ஒய் நுண்ணீர்ப்பாசனத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். நுண்ணீர்ப்பாசனத்திட்டத்தில் மானியம் பெற  விவசாயிகள் புகைப்படம் , சிட்டா, அடங்கல், எஃஎம்பி மேம், ஆதார் நகல் ,குடும்ப அட்டை நகல் , சிறு,குறு விவசாயி சான்றிதழ், 8.மண் மற்றும் நீர் ஆய்வு முடிவு  ஆகியவற்றை திருச்செங்கோடு வேளாண்மை விரிவாக்க மையத்தில் கொடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இத்திட்டம் குறித்து விபரம் தேவைப்படும் விவசாயிகள் திருச்செங்கோடு வேளாண்மை அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். துணை வேளாண்மை அலுவலர் அப்புசாமி நன்றி கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!