பள்ளி கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எஸ்.ஃப்.ஐ தீர்மானம்.

இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட  5-வது  மாநாடு ராசிபுரத்தில் நடந்தது. மாநாட்டுக்கு ரஞ்சித் குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சக்தி கொடி  ஏற்றினார். காயத்திரி வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில பொது செயலாளர் உச்சிமா காளி துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் சரவணன் செயலாளர் அறிக்கையை முன் வைத்து விளக்க உரையாற்றினார்.

அறிக்கையின் மீது பல் வேறு கல்லூரி , பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்கள் பேசினார்கள் .தங்கள் கல்வி நிறுவனங்களில் உள்ள பிரச்சினை குறித்தும் பேசினார்கள்.

பின்பு மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ,மருத்துவ கல்லூரிகள் கொண்டு வர வேண்டியும், மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க வலியுறுத்தியும், பள்ளி ,கல்லூரி   அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

இந்த மாநாட்டில் அமைப்பின் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட தலைவராக தேன்மொழி ,செயலாளராக சரவணன் தேர்வு செய்யப்பட்டனர். மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வுக்கு பின்பு ஜாஸ்மின் நன்றி கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!