ஆளுநர் வந்தார் குடிநீர் வந்தது, ஆளுநர் சென்றார் குடிநீரும் நின்றது – பொதுமக்கள் அவதி.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் ,காந்தி ஆசிரமம் புதுப்பாளையம் அடுத்த செம்பாம்பாளையம் பகுதியில்  150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசித்து வரும் இப்பகுதியில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.  இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பாம்பாளையம் கிளை செயலாளர் சக்திவேல் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி ஆசிரமத்திற்கு தமிழக ஆளுநர் வருவதை அடுத்து  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்தது. நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்ட ஆளுநர் காந்தி ஆசிரமத்திற்கு வந்து சென்றார். இதனைத் தொடர்ந்து செம்பாம்பாளையம் பகுதியில் ஒரு வாரம் மட்டும் நடந்த குடிநீர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பாம்பாளையம் கிளை கூட்டம் சத்திவேல் தலைமையில் நடந்தது இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ் அய்யாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   செம்பாம்பாளையம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை போர்கால அடிபடையில் சரி செய்ய வேண்டும், இல்லை எனில் ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!