ராசிபுரம் அருகே திருமணிமுத்தாறில் வடிந்து வரும் சாயக்கழிவு நீரால் பாதிப்பு – பொதுமக்கள் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா,  வெண்ணந்தூர்  ஒன்றியத்திற்கு உட்பட்ட மதியம்பட்டி , சௌரிப்பாளையம், பூலான் குட்டை ஏரி, பகுதிகள் வழியாக சேலத்தில் இருந்து வரும் திருமணிமுத்தாறு செல்கிறது.

திருமணிமுத்தாறு பாசனத்தைக் கொண்டு  இப்பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வந்தது. நேற்று இரவு  சேலத்தில் பெய்த கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மதியம்பட்டி பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கிராமங்களில் இருந்து வெளியே செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தற்போது திருமணிமுத்தாறில் மழை நீருடன் சாக்கடை மற்றும் சாயக்கழிவு கலந்து கரும்நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாசடைந்து ஆற்றில் நீர் வருவதால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடிநீர்  மாசு ஏற்பட்டு  நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மதியம்பட்டி பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதிகாரிகளிடம் மேல்மட்ட பாலம் அமைக்க பல மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.

ஆற்று நீர் மாசடைந்துள்ளது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் – தற்போது மழைநீர் தரைபாலத்திற்க்கு மேல் செல்வதால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அவதிபட்டு வருவதாகவும் தற்போது வரும் சாக்கடை மற்றும் சாயகழிவுநீருடன் வருவதால் விவசாய நிலங்கள் பாதிப்பதாக குற்றம் சாட்டினர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!