நாமக்கல்லில் ரயில் மறியல்-105 பேர் கைது

நாமக்கல் ரயில் நிலையம் அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாற்றாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், அரசியல் சாசனத்தின் 9 வது அட்டவணையில் இணைத்திட வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!