திருச்செங்கோடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட விவசாயி மீட்பு.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ரங்கநாதன்(58) விவசாயி. இன்று மாலை வழக்கம் போல் ரங்கநாதன் மேய்ச்சலில் இருந்த தனது  மாட்டை அழைத்துக் கொண்டு வீடு நோக்கிச் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள திருமணிமுத்தாறை கடக்க முயன்றார். திடீரென ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ரங்கநாதன் மற்றும் அவரது மாடும் அடித்துச் செல்லப்பட்டனர். ரங்கநாதன் கூக்குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ரங்கநாதனை மீட்க முற்பட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ரங்கநாதன் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரது மாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புகுழுவினர் நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் விரைந்து சென்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விவசாயி காப்பற்றப்பட்ட நிலையில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட எருமை மாடு பரிதாபமாக உயிரிழந்தது. திருமணிமுத்தாறு முறையாக தூர்வாரப்படாததால் ஆற்றின் நடுவே பரவலாக சீமைக்கருவேல முட்கள் வளர்ந்துள்ளதால் இதுபோன்ற சோக சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

படம் : அகரம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாட்டை நள்ளிரவிலும் தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!