ராசிபுரம் அருகே ஆற்றில் வரும் ரசாயண நுரையால் போக்குவரத்து பாதிப்பு

 

ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி பகுதி திருமணிமுத்தாற்றில் ரசாயணம் கலப்பு நுரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டநிலையில் அதிகாரிகளின் நடவடிக்கையால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மதியம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது இதனால் மதியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வந்தது. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதில் சாயக்கழிவு கலந்து வருவதால் ஆற்று நீரில் அதிகப்படியான நுரை ஏற்பட்டு மல்லசமுத்திரம் மதியம்பட்டி சாலையில் செல்ல முடியாத அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள் திருமணிமுத்தாற்றில் தாமரை செடிகளை அகற்றியும் சாலைகளை சீர் படுத்தியதால் போக்குவரத்து சீராடைந்தது.

இருந்தாலும் திருமணிமுத்தாறில் ரசாயண கழிவுகள் அதிகளவில் வருவதால் விவசாயத்திற்கு பயன்படுத்த இயாலத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!