ராசிபுரம் டிராக்டர் பட்டரை உரிமையாளர் வீட்டில் 25 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் அதே பகுதியில் டிராக்டர்  மற்றும் உழவுக்கு பயன்படுத்தும் பாகங்கள் தயாரிக்கும் பட்டரை நடத்தி வருகிறார். இன்று பகல் 12 மணிக்கு சுரேஷ் மணைவி கௌசல்யா வீட்டிலிருந்து தேனீர் எடுத்துகொண்டு பட்டரைக்கு சென்று கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்க்கு திரும்பினார்.  அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு  பீரோவில் இருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்து  50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப் பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் தடையங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!