ஜூலை 20, அகில இந்திய லாரிகள் வேலை நிறுத்தம்- தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு.

 
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு அவசர பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது. தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகப்பா முன்னிலை வகித்தார். பொதுக்குழுக் கூட்டத்தில் சேலம், சங்ககிரி, ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தற்போது லாரி தொழிலில் உள்ள பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு லாரிகளுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டு தொகையை பல மடங்கு உயரத்தியது, தமிழக அரசு விற்பனை வரி உயரத்தியது, இதனால் லாரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
      எனவே லாரி தொழிலை காப்பற்ற வரும் 20-ந் தேதி 6 மணி முதல் டீசல் விலை குறைக்க வேண்டும், காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும், சுங்கசாவடி கட்டணத்தினை ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்க வேண்டும் (அல்லது) நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடி கட்டணத்தினை ஒரே சீராக வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிககையை வலியுறுத்தி வரும் 20 ந் தேதி காலை 6 மணி முதல் நாடு தாழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தில் ஈடுப்படுவது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரியாளர்கள் சம்மேளனமும் கலந்து கொள்ளுவது என்று அவசர பொது பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள 75 லட்சம் லாரிகளும் வரும் 20-ந் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்தில் ஈடுபடவுள்ளது. இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றால் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கோடி வருவாய் இழுப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் மடடும் 
4 லட்சத்தி 50 ஆயிரம் லாரிகள் இந்த வேலை நிறுத்தில் ஈடுப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.  

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!