கொல்லிமலையில் இருவர் நரபலி? போலீசார் விசாரணை

  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் ஊராட்சி ஆலவாடிபட்டி சுடுகாட்டில் இரண்டு பேரை வெட்டி கொலை செய்து இருப்பதாக வாழவாந்தி நாடு காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல் துறையினர் விசாரனை மேற்கொண்ட போது ஆலவாடிபட்டி சுடுகாட்டின் ஒரத்தில் அப்பகுதியை சேர்ந்த முத்துசாமி (அண்ணன்) சீரங்கன் (தம்பி) ஆகிய சகேதர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இவர்களின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கொடுவாள் கொண்டு வெட்டி இரத்தம் வெளியேறிதால் இறந்துள்ளது  தெரியவந்தது. மேலும் இறந்து கிடந்த இருவரின் உடல் அருகே வாழை இலையில் கோழி முட்டை, விபதி, குங்குமம்,பத்தி, சூடம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் இருந்தது. மேலும் இதன் அருகே மதுபானம்  ஊற்றிய நிலையில் ஒரு டம்பளர் இருந்ததால் மந்திரவாதி இந்த சுடுகாட்டில் பூஜை செய்து சசேகதர்களை நரபலி கொடுத்தாக தெரிகிறது. இதனையடுத்து இரண்டு பேரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிதே பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இரண்டு பேரின் உறவினரிடம் விசாரனை மேற் கொண்ட போது முத்துசாமி, சீரங்கனுக்கு அருகில் உள்ளவர்களுக்கு நிலப்பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடைபெறும் என்று தெரியவந்தது. எனவே காவல்துறையினர் பல கோணங்களில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொல்லிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது​

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!