தற்கொலைக்கு முயன்ற காசாளர் மீது வழக்கு - ஐடி அதிகாரி நடவடிக்கை


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தனியார் நிறுவனத்தில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.நேற்று இரவு அந்நிறுவனத்தின் காசாளர் கார்த்திகேயனிடம் வருமானவரித்துறை அதிகாரி தயானந்த பிரசாத் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகேயன் முதல் மாடியில் இருந்து குதித்தார். காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக அதிகாரி தயானந்த பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு ஊரகக் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!