எலச்சிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பயிற்சி

எலச்சிபாளையம் வட்டாரம் ஆன்றாபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்  குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. எலச்சிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சத்திய பிரகாஷ்  இப்பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். 2018-19 ஆம் ஆண்டிற்கான மான்ய திட்டங்கள் பற்றி விளக்கினார். மேலும் தங்களது பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுகொண்டார்.


முரளிதரன் துணை தலைவர் பேசும்போது, பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து மழை வெள்ளம், வறட்சியின் காரணமாக பயிர் சேதமடைதல் போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்களுக்கு பயிர்காப்பீடு செய்து பயன்பெற கேட்டுகொண்டார். மேலும் பயிர் காப்பீடு செய்ய தேவையான விண்ணப்பம், முன்மொழிவு படிவம், ஆதார் அட்டை நகல், அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் , ஆகியவற்றோடு காப்பீடு செலுத்த வேண்டிய இடங்களான பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் செலுத்தலாம். என்பதை விளக்கி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் சுப்ரமணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகண்ணன்   ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!