திருச்செங்கோடு, ரூ.2.50 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டிடம்- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.


திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மிகவும் பழுதடைந்து இடப்பற்றாக்குறையுடன் இருந்து வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி முயற்சியால் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி முன்னிலை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ பழனிச்சாமி, திருச்செங்கோடு ஆர்டிஓ பாஸ்கரன், திருச்செங்கோடு தாசில்தார் சுப்பிரமணியம், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள்  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!