ஆவின் நிறுவனத்தில் 275 பேருக்கு பணி வாய்ப்பு, இணையதளம், மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் 275 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant )  பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியுடையவர்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி;ல் தெரிவித்துள்ளதாவது,

  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாகவுள்ள 275   முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant ) பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி. முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant ) பணிக்காலியிடத்திற்கு உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, இனசுழற்சி, மொத்த பணிக்காலியிடம் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்த பணிக்காலியிட அறிவிக்கை (Vacancy Notification) www.omcaavinsfarecruitment.com என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் விபரங்களை முழுமையாகவும், கவனமாகவும் படித்து தகுதியும், விருப்பமும் உள்ள மனுதாரர்கள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வலைதளம் வாயிலாக 16.07.2018 க்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!