திருச்செங்கோடு, செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் குண்டாஸில் கைது.



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடந்து செல்லும் பெண்களை மறித்து செயின் பறிப்பு, பணம் பறிப்பு, வீடு புகுந்து திருடியது உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த சேலம் மாவட்டம், எட்டிகுட்டையனூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகன்  முருகேசன்(32), இவருக்கு துணையாக இருந்த கன்னந்தேரி அடுத்த மேட்டுகாட்டானூர் பகுதியைச் சேர்ந்த ஜெமினி என்பவரது மகன் துரை (29) ஆகியோரை திருச்செங்கோடு ஊரக போலீசார் கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்திருந்தனர். இவர்கள் வெளியே வந்தால் மீண்டும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் எஸ்பி அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர்  ஆசியா மரியம் மேற்கண்ட குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

About The Author

You might be interested in

Comment (1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!