திருச்செங்கோடு தனியார் நிறுவனம் குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி – போலீசில் புகார்


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தனியார் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என வீடியோவுடன் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் இன்று காலை முதல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து வேகமாக தகவல்கள் பகிரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உண்மையில் வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கப்பட்ட திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை.இந்த சம்பவம் குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த தகவலை பரப்பியவர்கள் யார் என கண்டறியவும் திருச்செங்கோடு நகர காவல்நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தனியார் நிறுவனம் குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர்கள் யார் என்பது குறித்து திருச்செங்கோடு நகர காவல்துறையினர் மற்றும் சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!