ரிக் இன்ஜினியரிங் அசோசியேசன் சார்பில் நடமாடும் ஹைட்ராலிக் ஆயில் விற்பனை வாகனம் அறிமுகம்

திருச்செங்கோடு இன்ஜினியரிங் மற்றும் சர்வீஸ் சென்டர் அசோசியேசன் சார்பில் நடமாடும் ஹைட்ராலிக் ஆயில் விற்பனை வாகனம் அறிமுகமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விழா சங்ககிரி ரோடு புள்ளிக்காரர் மில் வளாகத்தில் நடந்தது. பிஆர்டி நிறுவனங்களின் தலைவர் மற்றும் ரெஸ்கா கவுரவ தலைவர் டி.பி.தங்கராஜ் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு மோட்டார் தொழில் முன்னேற்ற சங்க நிர்வாகி பி.வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார், ரிக் 68 ஆயில் விற்பனையை ரெஸ்கா தலைவர் மற்றும் பிஆர்டி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பரந்தாமன் தொடங்கி வைத்தார், முதல் விற்பனையை ரிக் உரிமையாளர் சங்க செயலாளர் சேகர்  பெற்றுக் கொண்டார். 140 ஆயில் விற்பனையை ரெஸ்கா துணைத் தலைவர் சண்முகம் தொடங்கி வைக்க லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகி அனிதா வேலு  பெற்றுக் கொண்டார். கிரீஸ் விற்பனையை ரெஸ்கா செயலாளர் இளங்கோ தொடங்கி வைக்க அனைத்திந்திய ரிக் உரிமையாளர்கள் நலச் சங்க தலைவர் குணசேகரன் பெற்று கொண்டார்.

இந்த புதிய லாரி குறித்து ரெஸ்கா தலைவர் மற்றும் பிஆர்டி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பரந்தாமன் கூறியதாவது:-

திருச்செங்கோடு இன்ஜினியரிங் மற்றும் சர்வீஸ் சென்டர் அசோசியேசன் சார்பில் நடமாடும் ஹைட்ராலிக் ஆயில் விற்பனை லாரியை அறிமுகம் செய்துள்ளோம். இந்த மொபைல் ஹைட்ராலிக் ஆயில் விற்பனை வாகனம் மூலம் திருச்செங்கோடு அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரிக் வாகனங்களுக்கு ஆயில் விற்பனை செய்ய உள்ளோம். இது 6ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டது. இந்த வாகனத்தில் பெட்ரோல் பங்குகளில் உள்ளது போல் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப் பட்டுள்ளது. உடனடியாக பிரிண்டிங் பில் வழங்கப்படும். கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். இதனால் ரிக் உரிமையாளர்களுக்கு நேரம், வண்டி செலவு ஆயில் சேதாரம் போன்றவை மீதமாகிறது. எங்கள் நிறுவனத்திற்கு விற்பனையும் அதிகமாகிறது. இந்த சேவைக்கு ரிக் உரிமையாளர்கள் ஹைட்ராலிக் ஆயில் பயன்படுத்துபவர்கள் ஆதரவு தரவேண்டும். மேலும் இந்த வாகனத்தில் 140 ஆயில் ,90 கியர் ஆயில், கிரீஸ் முதலியவையும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த பட்சமாக 50 லிட்டர் கேட்பவர்களுக்கு ஆயில் நேரில் சென்று சப்ளை செய்யப்படும். எனத் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!