திருச்செங்கோடு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது என்ன ? அதிகாரிகள் நேரில் விசாரணை.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இசிஇ படித்தும் வரும் மாணவர் ஒருவரை ஹாஸ்டல் வார்டன் சராமாரியாக தாக்கியதால் உடல் முழுவதும் காயங்களுடன் மாணவர் இருப்பதை போன்ற புகைப்படம் மற்றும் அது தொடர்பாக மற்றொரு மாணவர் பேசிய ஆடியோ ஆகியவை வாட்சாப் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரப்படுகிறது. இது தொடர்பாக திருச்செங்கோடு தாசில்தார் சுப்பரமணி சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மாணவர் கல்லூரி வகுப்பிற்கு ஒழுங்காக செல்லாமல் நண்பர்களின் உதவியுடன் ஹாஸ்டல் அறையில் தங்கிவிடுவதும், தொடர்ந்து ஹாஸ்டல் அறையில் இருந்து மாணவர்களின் செல்போன்கள் திருடுபோவது குறித்தும் சம்பந்தப்பட்ட மாணவரிடம் ஹாஸ்டல் வார்டன் விசாரணை நடத்தியபோது அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதும் இதனைத் தொடர்ந்து அவரை வார்டன் பிரம்பால் தாக்கியதும் தெரியவந்தது.தற்போது மாணவர் நலமுடன் இருப்பதும், அவரது பெற்றோரை வரவழைத்த கல்லூரி நிர்வாகம் நடந்ததை கூறி அம் மாணவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் அம்மாணவரின் எதிர்காலம் குறித்து எடுத்துக் கூறி இனி படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை கூறினர்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!