முன்னாள் படைவீரர் நலன் அலுவலகத்தில் இரவு காவலர் பணி வேலைவாய்ப்பு.

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. அப்பணியிடத்திற்கு நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த எழுதப்படிக்க தெரிந்த 01.7.2018 அன்று SCA, SC, ST-35 BC,  MBC -32> OC-30 வயதுக்கு மிகாமல் உள்ள நபர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள நபர்கள் அவர்களது விண்ணப்பம், கல்விச்சான்றுகள் மற்றும் குடும்ப அட்டை நகல்களுடன் தபால் மூலமாக மட்டும் 31.07.2018-ற்குள்  உதவி இயக்குநர், முன்னாள் படை வீரர் நலன்,மோகனூர் ரோடு,சார் ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் – 637001, என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் எனவும், 31.07.2018-ற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!