திருச்செங்கோடு,மத்திய அரசு நுண்ணீர் பாசனத் திட்டம் சிறப்பு முகாம்

திருச்செங்கோடு வட்டார விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாய நுண்ணீர்ப்பாசன திட்டம் குறித்து விளக்கும் சிறப்பு முகாம் திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நடந்தது. வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை சார்பில் நடந்த சிறப்பு முகாம் பற்றி திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ), அன்புச்செல்வி திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு சிறு, குறு விவசாயி சான்று, சிட்டா, அடங்கல் மற்றும் நிலத்தின் வரைபடம் வழங்குதல் ஆகியவற்றை வழங்கி திட்டத்தில் சேரலாம் எனவும், இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் மானிய பலன்களையும் பெறலாம் எனவும், இந்த சான்றுகளை பெறுவதற்கு சிறப்பு முகாமும் நடத்தப்பட்டதாகவும். தெரிவித்தார்.

இந்த முகாமில் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வரதராஜு திருச்செங்கோடு தாசில்தார் சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த முகாமில் விவசாயிகளுக்கு சிறு,குறு விவசாயி சான்றிதழ், அடங்கல் மற்றும் நில வரைபடங்கள் வழங்கப்பட்டது. மேலும் திட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!