உளவுத்துறை எஸ்.ஐ என கூறி டாக்டரை மிரட்டிய பெண் கைது.

நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று முன் தினம் இரவு காவல் உதவி ஆய்வாளர் உடையில் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவரிடம் தான் உளவுத்துறை எஸ்.ஐ எனவும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள் பணம் பெறுவதாகவும், அதனை விசாரிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஏதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு மருத்துவமனை ஊழியர்கள் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் எருமைப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் எஸ்.ஐ. உடையில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் மோகனூர் நாவலடியான் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த விமலாமேரி(35) என்பதும் இவர் போலியாக எஸ்.ஐ உடை அணிந்து வந்து மருத்துவமனையில் பணியில் இருந்தவர்களை மிரட்டி பணம் கேட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து விமலாமேரியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!