பரமத்தி வேலூர் வட்டாரத்தில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்ட பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி, கபிலர்மலை, மோகனூர் வட்டாரங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளின் கீழ் கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா நிகழ்ச்சிகள் மற்றும் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாக்களுக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                இந்நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சி.மாலதி, நாமக்கல்-சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன், உட்பட வருவாய் வட்டாட்சியர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!