திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.35 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.

திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்   சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர மஞ்சள் ஏலத்தில் 807 மஞ்சள் மூட்டைகள் ரூ.35 லட்சத்திற்கு   விற்பனையானது.

ஏலத்தில் ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து  விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.  மஞ்சளை  கொள்முதல் செய்ய   ஈரோடு, ராசீபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து   வியாபாரிகள்   வந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில் விரலி  ரகம் குவிண்டாலுக்கு ரூ 7168 முதல் 8859 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ 7070 முதல் ரூ 7900 வரை  விலைபோனது.  பனங்காளி ரூ11012முதல் 16399 வரை விலை போனது.  நேற்றைய ஏலத்தில் ரூ 35 லட்சத்திற்கு  மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது.  மஞ்சள்  விவசாயிகளுக்கு டிஏபிசிஎம்எஸ் நிர்வாகம் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்தது.  சென்ற வாரம் 905 மூட்டைகள் ரூ.42 இலட்சத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் மற்ற மார்கெட்டுகளை விட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ 300 அதிகம் கிடைத்தது என   கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!