பரமத்தி அருகே டிராக்டர் மீது ஜீப் மோதல் இருவர் சாவு-4 பேர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்,நவீன்,அருள், குணசேகரன், செல்லப்பன் மற்றும் ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோர் ஒரு பொலிரோ ஜீப்பில் வீரப்பூர் சென்றனர். சற்று முன் 6 பேரும் வழிபாடு முடித்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பரமத்தி வேலூர் அடுத்த நல்லூர் கந்தம்பாளையம் அருகே ஜீப் வந்த போது எதிரே சென்ற டிராக்டர் டிரைலரின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கிய செல்லப்பன், ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற 4 பேருக்கும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழஙகப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு மற்றும் சேலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து நல்லூர் கந்தம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!