திருச்செங்கோட்டில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு   கைலாசநாதர் கோவிலில் , சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் , மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது . சமயக்குறவர்கள் நால்வரில் ஒருவராகிய மாணிக்கவாசகர் , ஆனிமாதம் மூலம் நட்சத்திரத்தன்று சிவஜோதியில் ஐக்கியமானார் . இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் , ஆனி மூலத்தை முன்னிட்டு ,கைலாசநாதர் கோவிலில் உள்ள , மாணிக்கவாசகர் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது . தொடர்ந்து பக்தர்கள் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசக பாடல்களை பாராயணம் செய்தார்கள்.கயிலை வாத்தியங்கள் முழங்கிட ,  ஹரஹர சிவசிவ கோஷங்களை முழங்கி பக்தர்கள் வழிபாடு செய்தார்கள் . அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!