நாமக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வு - ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவின் சார்பாக சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் டேலண்ட் ஹண்டிங் திட்டத்தின் கீழ் 10 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 10 நபர், மாணவிகள் 10 நபர் (பள்ளி மாணவர் , மாணவர் அல்லாதோர்) தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் (ஞாயிற்றுகிழமை தவிர) மாலை நேரம் மட்டும் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் கால்பந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு போக்குவரத்து செலவு, சத்தான சிற்றுண்டி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் போன்றவை வழங்கப்படும். இந்த கால்பந்து பயிற்சியில் உள்ளவர்களுக்கு சிறப்பு விளையாட்டு அகாடமி மற்றும் விளையாட்டு விடுதியில் சேர முன்னுரிமை வழங்கப்படும். 

எனவே மேற்காணும் பயிற்சி வகுப்பிற்கான தேர்வு 18-07-2018 அன்று காலை 08.00 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ளவிருப்பம் உள்ளவர்கள் வயது சான்றுடன் வருதல் வேண்டும். என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!