மல்லசமுத்திரத்தில் ரூ 1 கோடிக்கு பருத்தி விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில்  4500 மூட்டை பருத்தி ரூ 1 கோடிக்கு விற்பனையானது.

ஏலத்தில் பருத்திப்பள்ளி,  ராமாபுரம்,  மங்கலம், மல்லசமுத்திரம் மேல்முகம், கீழ்முகம், மொரங்கம், எலச்சிபாளையம் கருமனூர், கோட்டபாளையம்  ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு  கொண்டு வந்தனர்.  சுரபி  குவிண்டால் ரூ 5410 முதல் 5969 வரை விற்பனையானது. விவசாயிகளுக்கு பணம் உடனுக்குடன் பட்டுவாடா  செய்யப்பட்டது. பருத்திக்கு  அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனர்.
         
இதேபோல் கடந்த செவ்வாய்கிழமை திருச்செஙகோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 350 மூட்டை பரு்த்தி ரூ 6 லட்சத்திற்கு விற்பனையானது. இந்த பருத்தி மாணிக்கம்பாளையம், செருக்கலை, காந்தி ஆசிரமம், கரிச்சிபாளையம், கந்தம்பாளையம் இறையமங்கலம், வெள்ளியம்பாளையம், சங்ககிரி, ஆனங்கூர் ஆகிய ஊர்களிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். இவை டெண்டர் மூலம் விற்பனை செய்யப்பட்டன. சுரபி குவிண்டால் ரூ 5681 முதல் 5836 வரை விற்றது. பிடி ரகம் ரூ 4712 முதல் 5516 வரை விலை போனது. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!