அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் கலந்துரையாடல்.

நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில்; பள்ளிக்கல்வித்துறை செயலர் (பாடதிட்டம்) .உதயச்சந்திரன் தமிழ்நாடு அரசின் புதிய பாடத்திட்டத்தின் பயன்கள் குறித்து மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் .உதயச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் புதிய பாடத்திட்டம் 1,6,9,11 வகுப்புகளுக்கு அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலும், சிந்தனையை தூண்டும் வகையிலும் இந்த பாடத்திட்டம் அமைந்துள்ளதாகவும் அனைவரும் தெரிவிக்கின்றனர். இப்புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் குறித்தும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. விரைவு குறியீடுகள் இடம் பெற்று ஒவ்வொரு நாளைக்கும் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் வகையில் அகில இந்திய அளவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பதில் பெருமை படுகிறோம். பாடத்திட்டத்தை மிக சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் ஆண்டு முழுவதும் பல கட்ட பயிற்சிகளை வழங்க உள்ளோம். முதல் கட்ட பயிற்சி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறுகின்றது. இந்த பயிற்சியின் மூலமாக மாணவர்களுக்கு கருத்தாக்கம் அடிப்படையிலான பாடத்திட்ட நெறிமுறைகள் கற்பித்தல் முறைகளை ஆசிரியர்களுக்கு விளக்கி சொல்லப்படுகின்றன. தொடர் பயிற்சிகளும் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பருவத்திலும் அளிக்கப்படும்.

புதிய பாடத்தில் பல பயிற்சிகள் குறித்து புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் புதிய வழிமுறைகளை ஆசிரியர்கள் கையாள்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 4 இலட்சம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம் பிற மாநில பாடத்திட்டங்கள் தேசிய அளவில் பாடத்திட்டங்களை கண்காணித்தும், சிங்கப்பூர் நாட்டின் பாடத்திட்டங்களான தமிழ், அறிவியல், கணிதம் பயிற்சி, அணுகுமுறைகளை தேவைக்கேற்ப பயன்படுத்த கொண்டுள்ளோம்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை செயலர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது நாமக்கல் ஆட்சியர் மு.ஆசியாமரியம், நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .உஷா, நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் சி.செந்தில்குமார் உட்பட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!