அட்மா திட்ட, திருச்செங்கோடு வட்டார விவசாயிகளின் ஆலோசனைக்குழுக் கூட்டம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம் திருச்செங்கோடு வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அட்மா தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், திருச்செங்கோடு அட்மா வட்டார விவசாயிகளின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் திருச்செங்கோடு அட்மா வட்டார தொழில் நுட்பக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 இக்கூட்டத்தில் முன்னதாக 2018-19 ஆம் ஆண்டு நிதி செலவின அறிக்கை வாசிக்கப்பட்டது. வேளாண்மை துறை சார்ந்த முக்கிய மானிய திட்டங்களான நுண்ணீர் பாசனத்திட்டம், பயிர்காப்பீட்டுத் திட்டம், கூட்டுப்பண்ணைத் திட்டம், மானாவாரி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதர மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமாக உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பொறியியல்துறை, வனத்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் தங்களது துறையைச் சார்ந்த மானியத்திட்டங்களை விளக்கமாக கூறினார்கள். வட்டார விவசாயிகளின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை வட்டார தொழில் நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!