திமுக பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ கே.எஸ்.மூர்த்தி வழங்கினார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட நெசவாளர் அணி சார்பில் பாண்டமங்கலத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்தி வேலூர் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார், துணை அமைப்பாளர் ஞா.அருண்குமார் வரவேற்றார். மாநில நெசவாளர் அணி செயலாளர் ப.சச்சிதானந்தம்,தலைமைக் கழகப்  பேச்சாளர் சுல்தானா பர்வீன், ஒன்றிய செயலாளர் கே.கே.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி சார்பில் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ கே.எஸ்.மூர்த்தி வழங்கினார். இறுதியாக விவசாய அணி எம்.சுரேஷ் நன்றி கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!