திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் பருத்தி மற்றும் எள் ஏலம் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் 1000 மூட்டை பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஏராளமான விவசாயிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சுரபி வகை பருத்தி குவிண்டால் ரூ.5829 முதல் ரூ 6199 வரையிலும் பிடி வகை பருத்தி ரூ.5322 முதல் 5919 வரையிலும் விலை போனது. ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.30 லட்சத்துக்கு ஏலம் மூலம் விற்பனையானதாக திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் நேற்று நடைபெற்ற  எள் மூட்டைகள் ஏலத்தில் சிகப்பு வகை எள் ரூ.64 .60 முதல் ரூ. 83 வரையிலும் கருப்பு எள் ரூ.62.50 முதல் ரூ.76.50  வரையிலும், வெள்ளை எள் ரூ.90.10 முதல் ரூ.100 .50 வரையிலும் விற்பனையானது. 25 மூட்டை எள்  ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை ஏலம் போனதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!