சுங்கச்சாவடி முற்றுகை - செல்ல.ராசாமணி பேட்டி

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த   20-ம் தேதி முதல் டீசல் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுதும் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டிப்பதாகவும், போரட்டத்தை தீவிர படுத்தும் விதமாக நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் லாரிகளை நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும், மத்திய அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!