சொத்து வரி உயர்வை வாபஸ் பெறக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பள்ளிபாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழக அரசை கண்டித்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் சொத்து வரி உட்பட 100 சதவீதம் வரை வரி உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது.  இந்த வரி உயர்வால் ஏழை எளிய சாதாரண நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வாடகைக்கு குடியிருக்கும் மக்கள் மீது வாடகை சுமை அதிகமாகும் நிலைமை ஏற்படும்           தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்தும் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.

 ஆர்ப்பாட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் ஆர். ரவி தலைமை வகித்தார்.   இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு செயலாளர் எஸ்.கந்தசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.மோகன் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.கே.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!