கமாண்டோக்களுக்கான போட்டி, நாமக்கல் காவலர்கள் சாதனை- எஸ்பி அருளரசு பாராட்டு.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் கமாண்டோ பயிற்சி முகாம் இரு மாதங்கள் நடைபெற்றது. ஆண் காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட முகாமிலும், பெண் காவலர்களுக்கு சேலம் மாவட்ட முகாமிலும் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் முடிவில் ஆண் காவலர்களுக்கான 10 கிலோ மீட்டர் பளு தூக்கி நடக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர் ரவி முதல் இடத்தையும், பெண் காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி, பல்வேறு ஓட்டப்பந்தைய போட்டிகள், நீளம் தாண்டுதல், 5 கி.மீ பளு தூக்கி நடக்கும் போட்டி மற்றும் எழுத்துத் தேர்வு என அனைத்து போட்டிகளிலும் ஒட்டு மொத்த இரண்டாம் இடத்தை பெண் காவலர் சவிதா பெற்றார். கமாண்டோ பயிற்சி போட்டிகளில் சிறப்பிடம் பெற்று சாதனைபுரிந்த நாமக்கல் மாவட்ட காவலர்கள் ரவி மற்றும் சவிதா ஆகியோரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பாராட்டி பரிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை மற்றும் மோட்டார் வாகனப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!