உயிரிப்பல்வகைமை பேணி பாதுகாக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் – ஆட்சியர் வேண்டுகோள்.

நாமக்கல் ,தனியார் ஓட்டலில் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் சார்பில் இன்று உயிரிப் பல்வகைமை சட்டம், 2002  அமுல்படுத்துதல், அணுகுதல் மற்றும் பயன்களை பங்கிடுதல்   தொடர்பான வழிமுறைகளை செயல்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துக்கொண்ட பயிற்சி பட்டறை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் இப்பயிற்சி முகாமினைதொடங்கி  வைத்தார்.

இப்பயிற்சி பட்டறையில் சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் உயிரிப்பல்வகைமை தொடர்புடைய உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

உயிரிப் பல்வகைமை சட்டம் 2002-ன் முக்கிய விதிகளை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதும் மற்றும் உயிரிப்பல்வகைமை சட்ட விதிகளை அமல்படுத்திவதில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இப்பயிற்சி பட்டறையின் முக்கிய நோக்கமாகும்.

                வேளாண்மைத்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அதே சமயம் பல்லுயிர் சமநிலையை பேணிப்பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். சிட்டுக்குருவி உள்ளிட்ட பல்வேறு சிறிய அளவிலான பறவை இனங்கள் இப்பொழுது அதிகம் காண முடிவதில்லை. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பல்வேறு சிறுசிறு உயிரினங்கள் கொண்டதும், பல்வேறு மருத்துவ குணமுடைய தாவர வகைகளும் கொட்டி கிடக்கும் உயிரிப்பல்வகைமை பேணி பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது நம் மாவட்டத்திற்கு மிகப் பெரிய பெருமையாகும்.

                மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு தாவர வகைகளை பயிரிட்டு அந்த அரியவகை தாவரங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மலைவாழ் மக்களின் வருமானத்தை அதிகரிப்பது உயிரிப்பல்வகைமை பேணி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டும். இங்கு வந்துள்ள அனைத்து அலுவலர்களும் இந்த பயிற்சி பட்டறையில் வழங்கப்படுகின்ற கருத்துகளை தங்களது துறையில் அர்பணிப்பு உணர்வோடு செயல்படுத்தி உயிரிப்பல்வகைமை மேம்படுத்த தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

                இப்பயிற்சி முகாமில் நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா , சேலம் மாவட்ட வன அலுவலர் ஏ.பெரியசாமி, ஜி.ஐ.இசட் நிறுவன அதிகாரி டாக்டர்.கீதாநாயக் உட்பட அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!