மல்லசமுத்திரம் டிசிஎம்எஸ் கிளையில் ரூ.1.50 கோடிக்கு பருத்தி விற்பனை.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில்  7000 மூட்டை பருத்தி ரூ.1 .50 கோடிக்கு விற்பனையானது. இன்று நடைபெற்ற ஏலத்தில் சுரபி ரகம் குவிண்டால் ரூ. 5900 முதல் ரூ.6329 வரை விற்பனையானது. விவசாயிகளுக்கு பணம் உடனுக்குடன் பட்டுவாடா  செய்யப்பட்டது. பருத்திக்கு  அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனர். இந்த ஏலத்தில் மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி,  ராமாபுரம்,  மங்கலம், மேல்முகம், கீழ்முகம், மொரங்கம், எலச்சிபாளையம் கருமனூர், கோட்டபாளையம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் பருத்தி மூட்டையை விற்பனைக்கு  கொண்டு வந்திருந்தனர். 

         

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!