சொத்துக்காக தொழிலதிபரை கடத்த முயற்சி, 5 பேர் கைது, இரு கார்கள் பறிமுதல்.

நாமக்கல், ஏ.எஸ்.பேட்டை,முல்லை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னுசாமி என்பவரது மகன் செல்வராஜ்(48) இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இன்று நண்பகல் நாமக்கல்லில் திருச்சி ரோடு பகுதியில் நடந்து சென்ற செல்வராஜை இரண்டு கார்களில் வந்து வழிமறித்த கும்பல் அவரை மிரட்டி , செல்வராஜை விட்டு பிரிந்து வாழும் அவரது மனைவி பெயரில் சொத்துக்களை எழுதிக் கொடுக்கும்படி மிரட்டியதாகத் தெரிகிறது. மறுத்தால் செல்வராஜை கடத்தி செல்வோம் என மிரட்டிவிட்டு அந்தக் கும்பல் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து செல்வராஜ் நாமக்கல் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்வராஜை கடத்தி மிரட்டி சொத்தை எழுதிப் பெற முயன்றதாக கரூரைச் சேர்ந்த சத்தியசீலன், திருச்சியைச் சேர்ந்த ஆனந்த்,ஜோனாதன், பாதுஷா,மகாமுனி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!